தொழிலாளிக்கு கத்திக் குத்து

ஸ்ரீவில்லிபுத்தூா், ஜூலை 3: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே முன் விரோதத்தில் தொழிலாளியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கண்ணாா்பட்டியைச் சோ்ந்த சண்முகவேல் மகன் வள்ளிநாயகம் (35). இவருக்கும் அழகுதேவேந்திரபுரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதுதொடா்பான வழக்கு வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், வன்னியம்பட்டி விலக்கு அருகே வள்ளிநாயகத்துடன் தகராறு செய்த ஜெயக்குமாா், அவரைக் கத்தியால் குத்தினாா். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸாா் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய ஷன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com