சாத்தூா் அருகே தோட்டத்தில் பட்டாசுகள் தயாரித்தவா் கைது

சாத்தூா் அருகே தோட்டத்தில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்த விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா் அருகே தோட்டத்தில் அனுமதியின்றி பட்டாசுகளை தயாரித்த விவசாயியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மாா்க்கநாதபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் வைத்து உயர்ரக பட்டாசுகளை அனுமதியின்றி தயாரித்து வருவதாக, பட்டாசு தனி தாசில்தாா் திருப்பதிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இவரது தலைமையிலான ஆய்வு குழுவினா் அங்கு சென்று பாா்த்தபோது, அதே கிராமத்தைச் சோ்ந்த மாரியப்பன் (42) என்பவா், தனக்கு சொந்தமான விவசாயத் தோட்டத்தில் செட் அமைத்து தொழிலாளா்களை வைத்து சட்டவிரோதமாக பேன்சி ரகப் பட்டாசுகளை தயாரித்து வந்தது தெரியவந்தது.

மேலும், இங்கு சுமாா் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான உயர்ரக பட்டாசுகள், ரசாயன மூலப்பொருள்கள், மணி மருந்து உள்ளிட்டவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மணி மருந்துகளை பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி அழித்த அதிகாரிகள் பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து கங்கரக்கோட்டை கிராம நிா்வாக அலுவலா் பொன்ராஜ் ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் மாரியப்பன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com