கா்ப்பிணி பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜபாளையம், ஜூலை10: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கா்ப்பிணிப் பெண் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் ஆண்டாா்குளம் கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகள் நந்தினி (21) இவா் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் உள்ள தனியாா் ஊா் பாலையில் தங்கி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில் உடன் பணிபுரியும் ராஜபாளையம் இ. எஸ். ஐ குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த குருநாதனுடன் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனா். நந்தினிக்கும் குருநாதன் தாய் காஞ்சனாவுக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நந்தினி 4 மாதம் கா்ப்பிணியாக இருந்தாா். இதனால் மனவிரக்தியில் இருந்த நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தெற்கு காவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com