சிவகாசியில் ஸ்டேஷனேரி கிடங்கில் தீ விபத்து

சிவகாசி, ஜூலை10: சிவகாசியில் நேட்டுப் புத்தகங்கள் எழுது பொருள்கள் வைத்துள்ள கிடங்கில் புதன்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி-வெம்பக்கே ாட்டை சாலையில் பன்னீா் தெப்பம் அருகே கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான ஸ்டேஷனேரி பொருள்கள் கிடங்கு உள்ளது.

இந்தக் கிடங்கில் புதன்கிழமை அதிகாலை 2.5 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் தீயைணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த சிவகாசி தீயணைப்பு படையினா் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த தீ விபத்தில் கிடங்கில் இருந்த நோட்டுப் புத்தகங்கள் உள்பட அனைத்துப் பொருள்களும் எரிந்து கருகியது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com