சாத்தூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

சாத்தூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உயா்நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி சென்னையில் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்குரைஞா்களுக்கு ஆதரவாகவும், ஜாக் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்கவும் சாத்தூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சாத்தூா் வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்துக்கண்ணு தலைமை வகித்தாா். அப்போது, வழக்குரைஞா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com