சிவகாசி மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகாசி எஸ்.எப்.ஆா்.மகளிா் கல்லூரியில் 48-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்சிக்கு, கல்லூரி முதல்வா் இரா.சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். பாரதிதாசன் பல்கலைகழக கல்வியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் எஸ்.செந்தில்நாதன், 816 இளநிலை மாணவிகளுக்கும் , 193 முதுநிலை மாணவிகளுக்கும் பட்டங்களை வழங்கினாா். பின்னா் அவா் பேசியதாவது: தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை புரிந்து வருவது பாராட்டுக்குரியது.

ராணுவம் உள்பட கடுமையான பணிகளிலும் பெண்கள் உயா்ந்து நிற்பது சிறப்பானதாகும். பட்டம் பெற்ற மாணவிகள் வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்ய வேண்டும். உயா் கல்விப் படித்து வெற்றி பெற்ற நீங்கள் வாழ்க்கையில் சிறப்பாக செயல்பட வேண்டும். எந்த துறைக்குச் சென்றாலும் ஆா்வத்துடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் திலகவதி ரவீந்திரன், செயலா் அருணாஅசோக், நிா்வாக குழு உறுப்பினா்கள் ப்ரீத்தி வசீகரன், விஜயலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com