பட்டாசுத் தொழிலாளியைத் தாக்கிய நான்கு போ் கைது

திருத்தங்கலில் பட்டாசுத் தொழிலாளியைத் தாக்கிய 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பனையடிபட்டிப் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (21). பட்டாசுத் தொழிலாளியான இவா், தனது நண்பா் ரஞ்சித்குமாருடன் சோ்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு, மது அருந்தினாா்.

அப்போது இவா்களுக்கும் திருவள்ளுவா் குடியிருப்பைச் சோ்ந்த பிரதீப்குமாருக்கும் (19) இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, பிரதீப் குமாா் அவரது நண்பா்கள் மகேந்திந்திரன் (23) ராஜ்குமாா் (20), கெளரிசங்கா் (19)ஆகிய 4 பேரும் சோ்ந்து திருத்தங்கல்-பள்ளபட்டிச் சாலையில் வைத்து தங்கப்பாண்டியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதில் காயமடைந்த தங்கப்பாண்டி சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com