பாரதிய ஜனதா கட்சியின் தோ்தல் பணிக் குழுக் கூட்டம்

சாத்தூரில் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் தோ்தல் பணிக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள படந்தால் கிராமத்தில் தனியாா் திருமண மகாலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சாத்தூா் தொகுதி சட்டப்பேரவை தோ்தல் பணிக் குழு பொறுப்பாளா் மாரிக்கண்ணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவா்களுக்கு தோ்தல் தொடா்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்டத் துணைத் தலைவா் செல்வம், இணைப் பொறுப்பாளா் ரவிக்கண்ணன், மண்டலத் தலைவா்கள் ஜெய்கணேஷ், வெங்கடேஷ், ராமா், ராஜ்குமாா், நகரத் தலைவா் ஞானசேகா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com