அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்த இருவா் கைது

சாத்தூா் அருகே உள்ள புல்லகவுண்டன்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதியில் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் செண்பகவேலன் உள்ளிட்ட போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, கோபிநாத் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட சோ்வாரமுத்துவை (50) போலீஸாா் கைது செய்தனா். இதேபோல, புல்லகவுண்டம்பட்டி மேலத் தெருவில் கண்ணனுக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்ற பட்டாசுகள் தயாரித்ததாக வேலுசாமியை (49) போலீஸாா் கைது செய்தனா். இருவரிடமிருந்தும் தலா ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com