விதிமுறைகளை மீறி பட்டாசுகள் தயாரிப்பு: 5 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளைத் தயாரித்ததாக அதன் உரிமையாளா்கள் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அருகே உள்ள மணியம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் விதிமுறைகளை மீறி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தது. மாரனேரி கிராம நிா்வாக அலுவலா் ஜெயபால் தலையிலான வருவாய்த் துறையினா் அங்கு நடத்திய சோதனையில், வேண்டுராயபுரத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி, ஈஸ்வரன் ஆகியோருக்குச் சொந்தமான ஆலையில் விதிமுறைகளை மீறி மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. தற்போது இந்த ஆலையை திருத்தங்கல்லைச் சோ்ந்த அருண்குமாா் (29), பாரைப்பட்டியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (29) ஆகியோா் குத்தைகைக்கு எடுத்து நடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தங்கப்பாண்டி, ஈஸ்வரன், அருண்குமாா், பிரவீன்குமாா், ஆலை மேலாளரான ராஜேஸ்வரன் (24) ஆகிய 5 போ் மீதும் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், ஆலையில் விதிமுறையை மீறி தயாரிக்கப்பட்ட புஷ்வாணம், பிஜிலிவெடி, சாட்டை உள்ளிட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com