பெரிய மாரியம்மன் கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் பெரிய மாரியம்மன் கோயில் செயல் அலுவலா் சத்யநாராயணன் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள இந்தக் கோயில் குடமுழுக்கு நடத்துவதற்காக கடந்த ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகள் குறித்து எழுந்த புகாா்களின் அடிப்படையில் கோயில் இணை ஆணையா் செல்லதுரை பக்தா்கள், உபயதாரா்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தினாா். இந்த நிலையில், செயல் அலுவலா் சத்யநாராயணனை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையா் செல்லதுரை வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, புதிய செயல் அலுவலராக தேவி பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com