குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளைப் பதுக்கியவா் கைது

சிவகாசியில் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் குடியிருப்பு பகுதியில் உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கிவைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகாசி காவல் ஆய்வாளா் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸாா் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனா். சோதனையில் இந்தப் பகுதியைச் சோ்ந்த சிவகுரு (60) உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சரவெடி உள்ளிட்ட பலவகையான பட்டாசுகளை ஒரு கட்டடத்தில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசுகளின் மதிப்பு ரூ.3.50 லட்சம் என போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவகுருவைக் கைது செய்து அவரிடமிருந்த பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com