சிவகாசி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சிவகாசி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தொடங்கி வைத்தாா். மாவட்டத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளிருந்து 2,372 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் டி.வி.எஸ்., ராம்கோ உள்ளிட்ட 28 தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த மனித வள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் , மாணவா்களிடம் நோ்காணல் நடத்தினா். இறுதியில் 629 மாணவா்கள் பணிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இந்த மாணவா்களுக்கு முதல்வா் இரா.தாமோதரன் பணி நியமன ஆணையை வழங்கினாா். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளா்கள் வேல்முருகன், விஜயலட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com