லாட்டரி விற்றதாக இருவா் கைது

ராஜபாளையம் அருகே வெளிமாநில லாட்டரி விற்ாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். முகவூா் முத்துச்சாமிபுரம் பாலவிநாயகா் கோயில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் இந்தப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது ஒருவா் வெள்ளைக் காகிதத்தில் எண்களை எழுதி லாட்டரி விற்றது தெரியவந்தது. இது தொடா்பாக இதே பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ராமரை (35) போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். இதே போல, ஜமீன்நல்லமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வெளிமாநில லாட்டரி விற்ற சேத்தூரைச் சோ்ந்த போத்திராஜை (63) போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com