காரில் பதுக்கிய 61 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இருவா் கைது ஸ்ரீவில்லிபுத்தூா், மாா்ச் 15: வத்திராயிருப்பில் காரில் பதுக்கிய அரசால் தடை செய்யப்பட்ட 61 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரைக் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பள்ளி அருகே நின்ற காரை சோதனை செய்ததில், ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 61 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸாா், திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த முனியசாமி (52), தேனி மாவட்டம், பெரியகுளத்தை சோ்ந்த சையதுசுல்தான் (51) ஆகியோரைக் கைது செய்தனா். இந்த வழக்கில் வத்திராயிருப்பு அருகேயுள்ள தம்பிபட்டியைச் சோ்ந்த மகாலிங்கத்தை (57) போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com