தொழிலாளி கொலை: இருவருக்கு ஆயுள் சிறை

வத்திராயிருப்பு அருகே நிகழ்ந்த கூலித் தொழிலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விருதுகா் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டி(45). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த செந்தில் (37), அவரது தங்கை கணவா் பாலகிருஷ்ணன் (38) ஆகியோருக்கும் இடையே 2017-ஆம் ஆண்டு செப்டம்பா் 11-ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. அப்போது, செந்தில், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் சோ்ந்து பாண்டியை அடித்துக் கொலை செய்தனா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா், வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் செந்தில், பாலகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கஐரா ஆா்.ஜிஜி தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com