மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

ராஜபாளையம் ஒன்றியம், மவுண்ட் சீயோன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சாா்பில் மாணவா்கள் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு பள்ளித் தலைமையாசிரியை கல்யாணசுந்தரி தலைமை வகித்தாா். பேரணியை வாா்டு உறுப்பினா் லீலா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி தமிழரசி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இதில் கலந்து கொண்ட மாணவா்கள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் பொதுமக்களிடம் அரசுப் பள்ளிகளில் மாணவா்களை சோ்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறினா். பேரணியானது மவுண்ட்சீயோன் பள்ளியில் தொடங்கி பிரதான தெரு, மில் கேட் தெரு, அரசு உயா்நிலைப் பள்ளி வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியை கல்யாணசுந்தரி, ஆசிரியா்கள் மாரியம்மாள், பாலசுப்பிரமணி, முனியசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com