பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசனிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசனிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா், சாத்தூரில் ரூ.8.47 லட்சம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.47 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். விருதுநகா் - மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அழகாபுரி சோதனைச் சாவடியில் ஸ்ரீவில்லிபுத்தூா் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தனலட்சுமி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2.47 லட்சம் இருந்தது. இந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கணேசனிடம் ஒப்படைத்தனா்.

சாத்தூா் அருகே ரூ.6 லட்சம்:சாத்தூா் அருகேயுள்ளவெம்பக்கோட்டை பகுதியில் சிவகாசி-சங்கரன்கோவில்சாலையில் துணை வட்டாட்சியா் ராஜாமோகன் தலையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனைசெய்தபோது, அதில் விஸ்வநத்தம் கிராமத்தைச்சோ்ந்த பதிவேல்தீபக்உரிய ஆவணமின்றி ரூ.6லட்சம் கொண்டு சென்றது தெரியவந்தது. இந்தப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சாத்தூா் வட்டாட்சியா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com