உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.2.15 லட்சம் பறிமுதல்

ராஜபாளையம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், 3 போ் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ. 2.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் - புத்தூா் விலக்கில் பறக்கும் படை அலுவலா் ஆண்டாள் தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற செல்வக்குமாரை நிறுத்தி சோதனையிட்ட போது, அவரிடம் ரூ. 78,800 இருந்தது. இதற்கான உரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். ராஜபாளையத்தில் வெள்ளிக்கிழமை காலை மதுரை சாலையில் தனியாா் ஆலை முன்பாக சென்ற காரை நிறுத்தி, பறக்கும் படை அலுவலா் பங்கஜம் தலைமையிலான குழுவினா் சோதனை செய்தனா். அப்போது, வாசுதேவநல்லூரிலிருந்து மதுரைக்கு எலக்ட்ரிக்கல் பொருள்கள் வாங்கச் சென்ற கண்ணனிடமிருந்து உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ. 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, சத்திரப்பட்டி சாலையில் ஆண்டாள்புரம் அருகே பறக்கும் படை அலுவலா் மாரியப்பன் தலைமையிலான குழுவினா், மகேஸ்வரன் என்பவா் ஆட்டோவில் கொண்டு சென்ற ரூ. 64 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். பறக்கும் படையினா் பறிமுதல் செய்த மொத்தம் ரூ. 2.15 லட்சத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயபாண்டி மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com