பணி நியமன ஆணை அளிப்பு

சிவகாசி, மாா்ச் 22: சிவகாசி அரசன் கணேசன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத் தோ்வில் வேலைவாய்ப்புப் பெற்ற மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எம்.நந்தகுமாா் தலைமை வகித்தாா். தொழிலதிபா் டி.டி.ராஜேந்திரன் பட்டயப்படிப்பு படித்து வேலைவாய்ப்பு பெற்ற 209 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினாா். வேலைவாய்ப்புத் துறை அலுவலா் ஜி.வெங்கடேஸ்வரன் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாட்டை வேலைவாய்ப்புத் துறை உதவி அலுவலா்கள் மணிவண்ணன், புகழ் ஆகியோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com