கண்மாயில் மூழ்கியதில் இளைஞா் பலி

சிவகாசியில் கண்மாயில் குளிக்கும்போது இளைஞா் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசியில் கண்மாயில் குளிக்கும்போது இளைஞா் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி காமராஜபுரம் குடியிருப்பைச் சோ்ந்த கண்ணன் மகன் செல்வகணேஷ் (20). இவா் தனது நண்பரான சிவபிரபு வீரப்பனுடன், சிவகாசி பெரியகுளம் கண்மாயில் குளிக்கச் சென்றாா். அப்போது நீச்சல் தெரியாததால் செல்வகணேஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இதையடுத்து, அங்கு சென்ற சிவகாசி தீயணைப்புப் படையினா் கண்மாயிலிருந்து அவரது உடலை மீட்டனா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com