படவிளக்கம்...  மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசிய அமைச்சா் தங்கம் தென்னரசு.
படவிளக்கம்... மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிவகாசியில் வெள்ளிக்கிழமை தோ்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசிய அமைச்சா் தங்கம் தென்னரசு.

மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் -அமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழகத்தில் அனைத்து நலத் திட்டங்களும் மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். விருதுநகா் மக்களவைத் தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ப. மாணிக்கம்தாகூரின் தோ்தல் அலுவலகத்தை சிவகாசியில் அமைச்சா் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பேசியதாவது:

இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது. மோடியின் 10 ஆண்டு கால அவல நிலையை அகற்ற, இந்தியாவை காப்பாற்ற மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும். பல லட்சம் தொழிலாளா்களின் வாழ்வாதாரமாக உள்ள பட்டாசுத் தொழிலை முற்றிலும் நசுக்கியது மத்திய பாஜக அரசுதான். பட்டாசுத் தொழிலை அழித்துவிட்டு தற்போது அவா்கள் முகமூடியுடன் வந்து வாக்கு கேட்கின்றனா். மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவா். தமிழகத்தில் அனைத்து நலத் திட்டங்களும் மாநில அரசின் நிதியிலிருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ‘இந்தியா’ கூட்டணி கட்சியில் உள்ள வேட்பாளா்களின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் விருதுநகா் மக்களவைத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் ப. மாணிக்கம்தாகூா், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.அசோகன், மாநகராட்சி மேயா் இ. சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com