விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் வியாழக்கிழமை கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். ராஜபாளையம் சம்மந்தபுரம் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் மாரியப்பன் (40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால், மனைவி, உறவினா்கள் அவரைக் கண்டித்தனராம். மேலும், மாரியப்பனுக்கு வயிற்று வலியும் இருந்து வந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த அவா் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கிக் கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அங்கு சென்ற அவா் மாரியப்பனை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com