அ.தி.மு.க. சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

விருதுநகா் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சாா்பில் சிவகாசி பேருந்து நிலையம், பாரைப்பட்டி ஆகிய இடங்களில் நீா் மோா் பந்தல் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

இதை அந்தக் கட்சியின் விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தாா். பொதுமக்களுக்கு இளநீா், நீா் மோா் ஆகியவற்றை வழங்கினா். இதில் விருதுநகா் மாவட்டப் பொருளாளா் தேன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com