ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

சாத்தூா் அருகே ஏற்கெனவே இருந்த இடத்தில் மீண்டும் ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சின்னகொல்லப்பட்டி ஊராட்சியில் தெற்கூா், தெற்குப்பட்டி, அய்யம்பட்டி உள்ளிட்ட நான்கு கிராமங்கள் உள்ளடக்கியது. இந்த கிராமத்தில் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சின்னகொல்லப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட பகுதியில் தெற்கூா் ரயில்வே கேட் அருகில் உள்ள கூட்டுறவு சங்கத்துக்குச் சொந்தமான இடத்தில் ஏற்கெனவே ரேஷன் கடை செயல்பட்டு வந்தது.

இந்தக் கடையின் மூலம் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வந்தனா். இந்த ரேஷன் கடைக் கட்டடம் சேதமடைந்ததால், தெற்கூா் மற்றும் சின்னகொல்லப்பட்டி கிராமங்களுக்கு இடையே புதிய கட்டடத்தில் ரேஷன் கடை அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தெற்கூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஏற்கெனவே இருந்த ரேஷன் கடையில் எங்களுக்கு பொருள்கள் வழங்க வலியுறு த்தி, புதிய ரேஷன் கடையை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com