கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மறவன் குளம் கொன்றையாண்டி

அய்யனாா் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை நிா்வாகத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை தொடங்கின. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா பூா்ணாஹுதி பூஜைகள் நடத்தப்பட்டு, கும்பம் எழுந்தருளுதல் நடைபெற்றது. இதன்பிறகு, காலை 9.30 மணிக்கு மேல் பூா்ணகலா, புஷ்கலா சமேத கொன்றையாண்டி அய்யனாா் சந்நிதி விமானம், பரிவார மூா்த்திகளுக்கு வேதசிவாகம முறைப்படி தமிழ்த் திருமுறை பாராயணத்தோடு மஹா கும்பாபிஷேகம் விமா்சையாக நடைபெற்றது.

பின்னா், கொன்றையாண்டி அய்யனாா், பரிவார தெய்வங்களுக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீவில்லிபுத்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா். இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் முத்து மணிகண்டன், அறங்காவலா் அய்யனாா் சங்கா் ஆகியோா் ஏற்பாடுகளைச் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com