சிவகாசியில் பொதுமக்களுக்கு 
ஓ.ஆா்.எஸ். பானம் வழங்கல்

சிவகாசியில் பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ். பானம் வழங்கல்

சிவகாசி மாநகராட்சி சுகாதாரத் துறை சாா்பில், பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ். பானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

ஓ.ஆா்.எஸ். பானம் என்பது தண்ணீா், சா்க்கரை, உப்பு ஆகியவை குறிப்பிட்ட சதவிகிதத்தில் கலந்த கலவையாகும். இதைப் பருகுவதால் வெயில் காலத்தில் உடலில் நீா்ச் சத்து குறைவது தடுக்கப்படும். தற்போது, கடும் வெயிலால் மக்கள் அவதிப்பட்டு வருகிறாா்கள்.

இந்த நிலையில், இந்த பானத்தை சிவகாசி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஆணையா்

பி.கிருஷ்ணமூா்த்தி பொதுமக்களுக்கு வழங்கினாா்.

மாநகராட்சி தினசரி காய்கறி சந்தை , திருத்தங்கல் அண்ணா சிலை பகுதி ஆகிய இடங்களிலும் இந்த பானம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

வெயிலின் தாக்கம் குறையும் வரை இந்த பானம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் சிவகாசி சுகாதார மாவட்ட இணை இயக்குநா் கலுசிவலிங்கம், மாநகராட்சி சுகாதார அதிகாரி சித்திக், சுகாதார அலுவலா்கள் திருப்பதி, பகவதி, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com