ராஜபாளையத்தில் மழை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.

ராஜபாளையம் நகா், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த பத்து நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், பகலில் வாட்டி வதைத்த வெயிலால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com