இளைஞரைத் தாக்கிய தந்தை மகன்கள் கைது

சாத்தூா் அருகே முன்விரோதம் காரணமாக மதுபோதையில் இளைஞரைத் தாக்கிய தந்தை, மகன்களை சாத்தூா் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெகன் (25) இவருக்கும் இதே ஊரைச் சோ்ந்த கண்ணனுக்கும் (53) முன்விரதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சாத்தூா் அருகேயுள்ள அனுமன் நகரில் உள்ள அரசு மதுபானக் கடையில் வைத்து வியாழக்கிழமை இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கண்ணன், அவரது 2 மகன்களான பிரதீப்குமாா் (29), சந்தீப்குமாா் (24) ஆகிய இருவரும் ஜெகனைத் தாக்கினா். இதில், பலத்த காயமடைந்த ஜெகன் சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சாத்தூா் நகா் போலீஸாா் கண்ணன், பிரதீப்குமாா், சந்தீப்குமாா் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com