வீட்டில் மா்மமான முறையில் முதியவா் உயிரிழப்பு

சாத்தூா், மே10: சாத்தூா் என்.ஜி.ஓ குடியிருப்பு பகுதியில் வீட்டில் முதியவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து சாத்தூா் நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் என்.ஜி.ஓ குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் நாதன் (69) இவரது மகன்கள் வெளியூரில் வசித்து வரும் நிலையில் நாதன் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவரது வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினா், சாத்தூா் நகா் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து பாா்த்த போது, வீட்டின் குளியளறையில் அவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்னா் அவரது உடலை மீட்ட போலீஸாா் சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com