புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

சாத்தூா் அருகேயுள்ள கே.முத்துசாமிபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா்: சாத்தூா் அருகேயுள்ள கே.முத்துசாமிபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கே.முத்துச்சாமிபுரம் கிருஷ்ணன் குடியிருப்புப் பகுதியில் உள்ள பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக இருக்கன்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் மூவேந்தன், போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த பெருமாள்பாண்டி (48) கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, அவரிடமிருந்த ரூ. 3,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, பெருமாள்பாண்டியை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com