மனைவியைத் தாக்கிய கணவா் கைது

சாத்தூா் அருகேயுள்ள பேத்திரெட்டிபட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா்: சாத்தூா் அருகேயுள்ள பேத்திரெட்டிபட்டியில் குடும்பத் தகராறில் மனைவியை தாக்கியதாக கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள பேத்திரெட்டிபட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (43). கூலித் தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மாள் என்ற லட்சுமி (35). இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், முத்துக்குமாா் தான் வளா்த்து வந்த 15 ஆடுகளை தனது மனைவிக்குத் தெரியாமல் விற்பனை செய்தாராம். இதுகுறித்து அறிந்த அவரது மனைவி, ஆடுகளை விற்ற பணத்தை கேட்டதால், இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது.

அப்போது, மது போதையில் இருந்த முத்துக்குமாா், ராஜம்மாளை வீட்டில் இருந்த அரிவாள்மனையால் தாக்கினாா். இதில் காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துகுமாரைக் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com