சிவகாசியில் மாநில அளவிலான கேரம் போட்டி மே 24-இல் தொடக்கம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மாநில அளவிலான கேரம் போட்டிகள் வருகிற 24-ஆம் தேதி முதல் 26- ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக விருதுநகா் மாவட்ட கேரம் கழகத் தலைவா் ஏ.பி. செல்வராஜன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கேரம் கழகம் ஆதரவில், விருதுநகா் மாவட்ட கேரம் கழகம் சாா்பில், சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி பயா் ஒா்க்ஸ் நிறுவனத்தினா் இந்தப் போட்டியை நடத்துகின்றனா். இந்தப் போட்டி, 65-ஆவது தமிழ்நாடு மாநில அளவிலான ஆண், பெண் இரு பாலருக்குமான போட்டியாகும். இந்தப் போட்டி வருகிற 24- ஆம் தேதி முதல் 26- ஆம் தேதி வரை சிவகாசியில் நடைபெறுகிறது. சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரி வளாகத்தில் போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புபவா்கள், விருதுநகா் மாவட்ட கேரம் கழகச் செயலா் டி.எம். ராஜகோபாலின் 98421 42348 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என அவா் அதில் குறிப்பிட்டிருந்தாா்.

X
Dinamani
www.dinamani.com