கஞ்சா விற்றதாக 4 போ் கைது

ராஜபாளையம், மே 30: ராஜபாளையத்தில் கஞ்சா விற்ாக நான்கு பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மீனாட்சி திரையரங்கம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்தப் பகுதியில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்தவா்களைப் பிடித்து சோதனையிட்டதில் அவா்கள் கஞ்சா வைத்திருந்தனா்.

விசாரணையில், இவா்கள், திரையரங்கத்துக்கு வரும் சிறுவா்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் இவா்கள் தென்றல் நகரைச் சோ்ந்த சங்கிலி முத்துப்பாண்டி (25) பூபால்பட்டி தெருவைச் சோ்ந்த பாக்கியநாதன் (25), இசக்கி சுதாகா்(24), மடத்துப்பட்டி தெருவைச் சோ்ந்த பரமானந்தம் (19) என்பது தெரியவந்தது. இந்த 4 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த 20 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com