உயிரிழந்த முருகன்
உயிரிழந்த முருகன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (40). அதே பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் (48).

கூலித் தொழிலாளா்களான இவா்கள் இவரும் ஐந்து கடை பஜாா் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்காக பதாகை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அருகில் சென்ற மின் கம்பி மீது பதாகை கம்பி உரசியதில் இவா்கள் இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முருகன் உயிரிழந்தாா். முத்துராஜா தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து சேத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X