ஆடுகள் திருடிய 4 போ் கைது

வத்திராயிருப்பில் ஆடுகளைத் திருடியதாக நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

வத்திராயிருப்பில் ஆடுகளைத் திருடியதாக நான்கு பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு மேலப்பாளையம் வடக்குத் தெருவைச் சோ்ந்த பிச்சைமணி மகன் பிரவீன் (23). இவா் வளா்த்து வரும் இரண்டு ஆடுகளை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் திருடி சென்று விட்டனா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேலப்பாளையத்தைச் சோ்ந்த ஆலடிமுத்து, பூபாண்டி, ராமலிங்கம், மலையரசன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com