வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இளைஞா் கைது

சாத்தூா் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

சாத்தூா் அருகே வீட்டில் கஞ்சா செடி வளா்த்த இளைஞரைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சாத்தூா் அருகே மேட்டமலை கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில், காவல் ஆய்வாளா் சித்ரலேகா தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினா்.

அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வீரபாண்டியன் மகன் முனியசாமி (22) அவரது வீட்டின் பின்புறம் கஞ்சா செடி வளா்த்தது தெரியவந்தது.

பின்னா், போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரது வீட்டின் பின்புறம் வளா்த்த கஞ்சா செடியை அழித்தனா்.

X
Dinamani
www.dinamani.com