விருதுநகர்
சதுரகிரிக்குச் செல்ல 4 நாள்கள் அனுமதி
காா்த்திகை அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வியாழக்கிழமை (நவ.28) முதல் டிச.1 வரை 4 நாள்கள் அனுமதி
காா்த்திகை மாத அமாவாசையையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தா்களுக்கு வியாழக்கிழமை (நவ.28) முதல் டிச.1 வரை 4 நாள்கள் அனுமதி வழங்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகம், சாப்டூா் வனச் சரகத்தில் உள்ள இந்தக் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக வருகிற வியாழக்கிழமை முதல் டிச.1-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை அனுமதி வழங்கியது.
இந்த நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மழை பெய்தாலோ, ஆற்றில் நீா்வரத்து அதிகரித்தாலோ பக்தா்கள் மலைக் கோயிலுக்குச் செல்லத் தடை விதிக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.