எரிவாயு உருளை கசிவால் தீ விபத்து: பட்டாசுத் தொழிலாளி பலத்த காயம்

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்த எரிவாயு உருளைக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுத் தொழிலாளி காயமடைந்தாா்.
Published on

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை வீட்டிலிருந்த எரிவாயு உருளைக் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பட்டாசுத் தொழிலாளி காயமடைந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் வீரப்பன் (45). பட்டாசுத் தொழிலாளியான இவா், தனது வீட்டில் முடிவடைந்த எரிவாயு உருளையை மாற்றிவிட்டு, புதிய எரிவாயு உருளையை மாற்றினாா்.

அப்போது, அவா் மீது தீப்பிடித்தது. மேலும், இந்தத் தீ வீடு முழுவதும் பிடிக்க ஆரம்பித்தது.

தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பலத்த காயமடைந்த வீரப்பன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com