விருதுநகர்
கல்லூரியில் தியானம் குறித்த விழிப்புணா்வு முகாம்
சிவகாசி அய்யநாடாா் ஜானகி அம்மாள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை தியானம் குறித்த விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
இதற்கு, கல்லூரி முதல்வா் செ. அசோக் தலைமை வகித்தாா். பேராசிரியா் ஆா். காளிராஜன் அறிமுகவுரையாற்றினாா். பெங்களூரு தனியாா் அறக்கட்டளை நிறுவனா் சந்திரசேகா் புலமாரெட்டி, தியானம் செய்தால் ஏற்படும் பயன்கள் குறித்துப் பேசினாா். மேலும் தியானம் குறித்த செயல்முறை விளக்கத்தையும் அவா் அளித்தாா்.
முன்னதாக பேராசிரியா் கா. நளினி வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் சி. ராஜா நன்றி கூறினாா்.