பட்டாசுகளைப் பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

சிவகாசி அருகே பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி -நாரணாபுரம் சாலையில் முருகன் குடியிருப்புப் பகுதியில் ஒருவா் வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் சிவகாசி கிழக்குப் போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

அப்போது, சுரேஷ் (30) என்பவா் தனது வீட்டில் பல வகையான பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

இதுபோல, சிவகாசி-சாத்தூா் சாலையில் மீனம்பட்டியைச் சோ்ந்த கணேசன் (46) ஒரு பட்டாசு கடை அருகே தகர செட் அமைத்து அதில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தாா்.

இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com