காகிதக் குழாய் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

சிவகாசியில் பேன்சி ரகப் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
Published on

சிவகாசியில் பேன்சி ரகப் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

சிவகாசி கவிதா நகரில் சித்துராஜபுரத்தைச் சோ்ந்த அய்யனாருக்குச் (42) சொந்தமான காகிதக் குழாய் தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் வைத்திருந்த காகிதக் குழாய்கள், மூலப்பொருள்கள் தீயில் எரிந்தன. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினா் சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் வீசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com