சிவகாசியில் அண்ணா பிறந்த நாள் விழா

சிவகாசியில் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

சிவகாசியில் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சிவகாசி நகா் காவல்நிலையம் முன் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சாா்பில், மாநகராட்சி மேயா் இ.சங்கீதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் துணை மேயா் கா.விக்னேஷ்பிரியா, கட்சியினா் கலந்து கொண்டனா்.

இதேபோல, விருதுநகா் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், சிவகாசியில் உள்ள அண்ணா சிலைக்கு கட்சியின் மாவட்டச் செயலா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினாா். இதில் கட்சியின் மாவட்ட பொருளாளா் தேன்ராஜ் , முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com