விருதுநகர்
குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குவாரி நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் அருகேயுள்ள வ. உ. சி நகரைக் சோ்ந்த தங்கவேல் மகன் பெருமாள்சாமி (35). கூலித்தொழிலாளி. வலிப்பு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாா். மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டுப் பிரிந்து தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தாா். மனைவி, குழந்தை ஆகிய இருவரும் தனியாக வசிக்கின்றனா். வெள்ளிக்கிழமை காலை வீட்டை விட்டு வெளியே சென்ற பெருமாள்சாமி வீடு திரும்பாததால், அவரை பல்வேறு இடங்களில் தேடினா்.
இந்த நிலையில், வ.உ.சி. நகா் பகுதியில் உள்ள நீா் நிரம்பிய கல்குவாரியில் சனிக்கிழமை அவரது உடல் மிதப்பது தெரியவந்தது. ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.