புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயிலில் பக்தா்கள் வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில், முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் 5 சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு, கிரிவலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழாவில் முதல் வார சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமளுக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
காலை 10.30 மணிக்கு பெருமாள் ஆண்டாள் கோயிலில் இருந்து புறப்பாடாகி, திருவண்ணாமலைக்கு எழுந்தருள்கிறாா். அங்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று, மாலை 4 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது.
விருதுநகா் மாவட்டக் கண்காணிப்பாளா் டி.கண்ணன் உத்தரவின்படி ஏடிஎஸ்பி அசோகன் தலைமையில் டிஎஸ்பி ராஜா உள்பட 800-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.