விருதுநகர்
அதிமுக பொதுக் கூட்டம்
ராஜபாளையம் அருகே அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே அதிமுக சாா்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூரில் நடைபெற்ற கூட்டத்துக்கு தெற்கு ஒன்றியச் செயலா் நவரத்தினம் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், விருதுநகா் மேற்கு மாவட்டச் செயலருமான கே. டி ராஜேந்திர பாலாஜி சிறப்புரையாற்றினாா். முன்னதாக தலைமைக் கழகப் பேச்சாளா் சிட்கோ சீனு பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் என்.எம். கிருஷ்ணராஜ், ராஜபாளையம் நகரச் செயலா்கள் பரமசிவம் (தெற்கு), வழக்குரைஞா் ஏ.டி.முருகேசன் (வடக்கு), மாவட்ட இணைச் செயலா் அழகுராணி, மாவட்ட மகளிரணி செயலா் ராணி, அதிமுக தொண்டா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.