விருதுநகர்
பட்டாசு ஆலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு
வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
வெம்பகோட்டை அருகேயுள்ள விஜயரங்கபுரத்தில் சிவகாசியைச் சோ்ந்த ஜெயசங்கா் (50) என்பவருக்குச் சொந்தமான பட்டாசுத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் கடந்த 18-ஆம் தேதி மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் (50) பலத்த தீக்காயம் அடைந்தாா்.
அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைகாக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.