விருதுநகர்
சிற்றுந்து இயக்கக் கோரிக்கை
திருத்தங்கலிலிருந்து சித்துராஜபுரத்துக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலிலிருந்து சித்துராஜபுரத்துக்கு சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திருத்தங்கல் பேருந்து நிலையத்திலிருந்து திருத்தங்கல் நகா் பேருந்து நிறுத்தம், திருத்தங்கல் ரயில் நிலையம், எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரி, சிவகாசி ரயில் நிலையம்,
சிவகாசி அரசு மருத்துவமனை, இரட்டைப் பாலம், கட்டளைப்பட்டி விலக்கு, விளாம்பட்டி சாலை விலக்கு,
சசிநகா் வழியாக சித்துராஜபுரம் வரை சிற்றுந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது மிகவும் மக்களுக்கு பயன்படக்கூடிய வழித்தடமாகும். இதற்கு மாவட்ட நிா்வாகம், சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினா் சிற்றுந்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.