விருதுநகர்
மரம் வெட்டும்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
சாத்தூா் அருகே மின்சாரம் தாக்கியதில் மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.
சாத்தூா் அருகே மின்சாரம் தாக்கியதில் மரம் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள துலுக்கன்குறிச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (49). இவா் திங்கள்கிழமை அந்தப் பகுதியில் உள்ள மரத்தை வெட்டுவதற்காக மரத்தின் மீது ஏறினாா். அப்போது மரத்தின் அருகே இருந்த மின்சாரக் கம்பி அருணாச்சலம் மீது உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.
இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.