கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

Published on

மேலப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேலப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சாத்தூா் தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சாத்தூா் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் பாலகிருஷ்ணன், போலீஸாா் வெள்ளிக்கிழமை இந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மேலப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளி அருகே மேலப்புதூா் நடுத்தெருப் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (26) கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சா, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com